ஹட்டன் நகரில் எரிபொருள் தட்டுப்பாடு! வாகனங்கள் நீண்ட வரிசையில்
ஹட்டன் நகரில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(12) மாலை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரிலுள்ள ஏனைய அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் கையிருப்பு முழுமையாகத் தீர்ந்துள்ளதாக, அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்கள் நீண்ட வரிசை
இதனால், தற்போது பெற்றோல் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே இடமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஹட்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குப் படையெடுத்துள்ளனர்.

இதனால், அந்த நிலையத்தை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் உருவாகியுள்ளதுடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் நகரில் ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri