நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு: டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் முகமாக டீசல் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் முதலாவது டீசல் தாங்கிய கப்பல் நேற்றிரவு வந்தடைந்துள்ளது.
அந்த கப்பலில் 35,000 மெற்றிக் டன் டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதனை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் எம்.ஆர்.டப்ளியு டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள டீசலை உடனடியாக மற்றைய மாகாணங்களுக்கு அனுப்பி வைப்பதினூடாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் 2,000 மெற்றிக் டன் அளவான டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 2 தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
