எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் வருகிறது QR முறை
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படத்தப்படவுள்ளது.
அந்த வகையில் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.
இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம்
பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் 'QR' முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே மீண்டும் QR குறியீட்டு முறை கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் முறைமை தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam