எரிபொருள் QR குறியீடு : பழைய தொலைபேசி இலக்கங்களை மாற்ற புதிய வசதி அறிமுகம்!
தமது வாகனங்களுக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தற்போது கைவசம் இல்லாத அல்லது செயலிழந்த நிலையில் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2026 மார்ச் 14ஆம் திகதிக்கு முன்னர் எரிபொருள் QR முறைமையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய வசதி பொருந்தும்.
பழைய தொலைபேசி இலக்கத்திலான கணக்கு
பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் தற்போது உங்களிடம் இல்லை என்றாலோ அல்லது அது வேறொருவருடையது என்றாலோ இந்த மாற்றத்தைச் செய்யலாம்.

வாகன உரிமையாளர்கள் அதிகார பூர்வ இணையதளத்தின் ஊடாக பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்: வாகன இலக்கம் (Vehicle Number) மற்றும் சசி இலக்கம் (Chassis Number) ஆகியவற்றைச் சரியாக உள்ளிட வேண்டும்.
வாகன விபரங்கள் உறுதி செய்யப்பட்டதும், அங்கிருக்கும் 'Override' என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் 'Override' செய்தவுடன், அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த பழைய தொலைபேசி இலக்கத்திலான கணக்கு தரவுத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்படும்.
அதன் பின்னர் உங்களது தற்போதைய புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீண்டும் பதிவு செய்து புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri