15 ரூபாவால் உயர்ந்த எரிபொருள் விலை - இலங்கைக்கு வெரிட்டே ரிசர்ச் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் நவம்பர் மாதம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், டீசல் மற்றும் பெட்ரோல் 92 ஆகியவற்றின் விலைகள் செலவு மீட்பு(Cost Recovery) மட்டத்தை எட்டவில்லை என இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு முன்னணி சுயாதீன, பல்துறை ஆய்வு நிறுவனமான, வெரிட்டே ரிசர்ச் தெரிவித்துள்ளது.
டீசல் ஒரு லீற்றருக்கான சந்தை விலைக்கும், செலவு மீட்பு விலைக்கும் இடையிலான இடைவெளி 62 ரூபாயாகக் குறைந்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அதே போன்று, பெட்ரோல் 92 ஒரு லீற்றருக்கான விலை இடைவெளி 57 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லீற்றருக்கு 70 ரூபாய் என்ற டீசல் மானியம், தற்போதைய விலை நிர்ணய சூத்திரத்திலும் தொடர்வதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தரவுகள் PublicFinance.lk இணையத்தளத்தின் எரிபொருள் விலை கண்காணிப்புத் தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 வாரங்களாக நீடிக்கும் போராட்டம்: இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிகோரி வீதியில் இறங்கிய யாழ். மக்கள்