திடீரென அதிகரித்த எரிபொருள் விலைகள்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்
மத்திய கிழக்கில் போரை அடுத்து ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகமாக எரிபொருளை வாங்கியமை இந்த விலை உயர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

எரிபொருளை சிக்கனமாக வாங்கியிருந்தால் இந்த மாத இறுதி வரை இருந்த விலையில் எரிபொருளை வாங்க முடிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி முழு உலகையும் பாதித்து வருவதால், கூட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், நுகர்வை மட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri