மத்திய கிழக்கு பதற்றம்! இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலைமை காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான விசா காலத்தை 14 நாட்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக 28 ஆம் திகதி முதல் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், நாட்டை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டிருந்த சில வெளிநாட்டினர் தங்கள் விசாக்கள் காலாவதியானதால் வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான பயணங்கள் இரத்து
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, மாற்றுப் பயண ஏற்பாடுகளை செய்ய அவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri