சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை
கருத்தில் கொண்டு
எரிபொருள்
விலையை
குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா
மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை
ஒன்பது
மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
பரிசீலிப்பார்
என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“எண்ணெய் விலையை குறைப்பது
தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய்
விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில்
விலையைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான்
நினைக்கிறேன், ”என்று குப்தா கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,