எரிபொருள் கப்பலுக்கு டொலர்கள் செலுத்தப்பட்டன : விரைவில் விநியோகம் என்று அமைச்சு அறிவிப்பு!
சிங்கப்பூர் நிறுவனத்தினால் எடுத்து வரப்பட்ட எரிபொருளுக்காக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் வழங்கிய தகவல் ஒன்றின்படி, 35.3 மில்லியன் டொலர்கள், குறித்த சிங்கப்பூர் கப்பலுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
சுமார் 37ஆயிரத்து 500 மெற்றிக்தொன் டீசல் இந்த கப்பலில் எடுத்து வரப்பட்ட நிலையில், கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது.
இது கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வந்தது
இந்தநிலையில் குறித்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக, எரிபொருள் இறக்குமதியில் தடக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, எரிபொருள் விநியோகத்திலும் நெருக்கடி நிலை ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யுக்ரெய்ன் பதற்றம் காரணமாக எரிபொருட்களின் விலை உயரும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



