ஈரான் - இஸ்ரேல் மோதல்! இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கில் மோதல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு கிடையாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
போதுமானளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் கோரிக்கை
எனவே, பொதுமக்கள் தேவையற்ற வகையில், எரிபொருள் நிலையங்களில் கூட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், வீடுகளில் எரிபொருளினை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள போர் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதுடன், எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 18 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
