இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
புதிய இணைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அதேநேரம் மண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விலைத் திருத்தம்
நவம்பர் மாதம் முழுதும் நடைமுறைக்கு வரும் வகையில் அந்த திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீட்டர் ஆகியவற்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கான விலைத் திருத்தம் இன்று பின்னிரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 13 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
