அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் (Photos)
மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இன்மையால் வாகன உரிமையாளர்கள் பெரல்கள் மற்றும் கான்களுடன் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவும், அனேகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக மன்னாரில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் (9) மன்னார் நகரில் உள்ள அனேகமான உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தி வந்த எரிவாயு முடிவடைந்த நிலையில் பல உணவகங்கள் மூடப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் எரிவாயுக்களை பயன்படுத்தும் மக்களும் எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியாவில் இயங்கி வந்த முன்னணி சைவ உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரில் இயங்கி வந்த முன்னணி சைவ உணவகங்கள் மூன்று இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் உட்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றபோதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால் மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை .
தொடர்புடைய செய்திகள்
பாரியளவில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?











தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
