130 பில்லியனுக்கும் அதிகமான தொகையை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த தவறியுள்ள நிறுவனங்கள் அடையாளம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக 130 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) நேற்றைய அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்தத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.
அதிலும் மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 56 பில்லியன் ரூபாவையினையும் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.