கியூஆர் குறியீட்டு எரிபொருள் விநியோக முறைமை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மயூர நெட்டிகுமார தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பு
இதேவேளை இன்றைய தினம் (05.09.2026) முதல் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நாப்தாவின் (Naphtha) விலைகள் குறைக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாவும், ஒரு லீட்டர் நாப்தாவின் விலை 35 ரூபாவும் குறைக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரா குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து, 210 ரூபாவாக குறைக்கப்படும்.
மக்களுக்கு நிவாரணம்
இதற்கிடையில், உலை எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.