எரிபொருள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மீண்டும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெளியேறியதன் பின்னர் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை
எதிர்காலத்தில் எரிபொருள் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வாகன உரிமையாளர்களின் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2) The effective date will be announced. Not an easy task to setup the system & implement it. But It has to be implemented to guarantee everyone a weekly quota during the next few months of rationing. Public support is needed to implement this smoothly & will upgrade as needed.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 17, 2022



