எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகம் ஓரளவு வழமையான நிலையை அடைந்துள்ளதாகக் கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் வழமைக்குத் திரும்பி வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காணப்படும் நீண்ட வரிசைகள் குறைந்துள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் போக்குவரத்து கட்டணம்
எனினும், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டுமே இன்னமும் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எரிபொருள் போக்குவரத்துக் கட்டணத்தை 20 சதவீதத்தால் (20%) அதிகரிக்குமாறு கோரப்பட்ட போதிலும், 15 சதவீத (15%) கட்டண உயர்வை வழங்க இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.
இதனால் எரிபொருள் போக்குவரத்தும் தற்போது வழமையான நிலையை எட்டியுள்ளதாக எரிபொருள் போக்குவரத்துச் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடோ அல்லது விநியோகத் தடைகளோ இல்லாததால், பொதுமக்கள் தேவையின்றி பதற்றமடைந்து எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இச்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டப்பாடும் இல்லை எனவும், கடந்த சில நாட்களாக எரிபொருள் தொடர்பாக நிலவிய நெருக்கடி நிலை நேற்று நிலவரப்படி வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan