கியூ.ஆர் அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகம் (Photos)
புத்தளம் எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகமானது கியூ.ஆர் அட்டை முறைமையில் வெற்றிகரமாக இடம்பெறவுள்ளது.
புத்தளம் - தில்லையடி ஜப்ரிஸ் எரிபொருள் நிலையத்திலே இன்று(29) கியூ.ஆர் அட்டை முறைமையின் கீழ் பெட்ரோல் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நடவடிக்கை வெற்றி
பரீட்சார்த்தமாக இடம்பெற்ற இந்த நடவடிக்கையானது வெற்றியளித்துள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வருகின்ற ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் தேசிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறைமை இங்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
கியூ.ஆர் அட்டை முறைமை
தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர் அட்டை முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகிப்படும்.
இல்லாவிடில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என ஜப்ரிஸ் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்(Video) |
வவுனியா
வவுனியாவில் தேசிய கியூ.ஆர் அட்டை முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா ஊடக அமையத்தினரால் இந்த கியூ.ஆர் அட்டை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் அட்டை வழங்கள்
கியூ.ஆர் அட்டையினை பெற்றுக்கொள்ளாதாவர்கள் மற்றும் செல்லுபடியற்ற வகையில் கொண்டு வருபவர்களுக்கே கியூ.ஆர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் கியூ.ஆர் அட்டையானது பதிவு செய்யப்படுகின்றது.
அத்துடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இங்கு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: திலீபன்