நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்(video)
இதற்கமைய கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் வழங்கப்பட்டு அமைதியான முறையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று(28) முற்பகல் பெட்ரோல் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாராட்டுக்கள்
இந்த செயற்றிட்டத்திற்கு அமைவாக, கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்களும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் இணைந்து வாகனங்களின் புகை பரிசோதனை அறிக்கை ஊடாக 3,4,5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகித்துள்ளனர்.
இத்திட்டம் சிறப்பாக வெற்றியடைந்துள்ளதுடன் பொதுமக்கள் உரிமையாளருக்கு பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
மருதமுனை,பெரியநீலாவணை ,கல்முனை ,நற்பிட்டிமுனை, சவளக்கடை ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு என பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் பல நாட்களாக காத்திருந்து ஏமாற்றமாக வீடு திரும்பியவர்களும் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்றுள்ளதாக மக்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல நாட்களாக வரிசைகளில் நின்ற வாகனங்களுக்கு எரிபொருள் நிலைய பணியாளர்களே வருகை தந்து தொடர் இலக்கம் வழங்குவதுடன் நேர்த்தியாக இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஐந்து நாட்களுக்கு மேலாக டீசல் பெறுவதற்காக வாகனங்களுடன் காத்திருந்த மக்களுக்கு டீசல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்களுக்கு நேற்று(28) பகல் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று பகல் ஆரம்பிக்கப்பட்ட டீசல் விநியோகம் இரவு வரை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விநியோகத்தில் ஓகஸ்ட் மாதம் முதல் இறுக்கமான நடைமுறை: செய்திகளின் தொகுப்பு |