90 வீதமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் செயலிழப்பு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 90 வீதமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் செயலிழந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரப்படும் எரிபொருள் உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டப்ளியூ.எஸ்.பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கூட்டுத்தாபனத்தின் 80 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மட்டுமே விநியோகம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகித்துள்ளதுடன் 80 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மட்டுமே எரிபொருளை ஏற்றிச் செல்ல கொள்கலன் வண்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என தனியார் எரிபொருள் கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஐ.ஓ.சி நிறுவனத்தின் 200 எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம்

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் 150 முதல் 200 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்ல சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் எரிபொருள் கிடைக்காது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் கூட நீண்டவரிசைகளில் மக்கள் நிற்பதை காண முடிவதாகவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam