பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட மலிவான விலையில் எரிபொருள்!

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Rakesh Apr 09, 2023 06:00 AM GMT
Report

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விடக் குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடையும், அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் Sinopec- United Petroleum of Australia மற்றும் RM Parks அமெரிக்காவின் Shell Plc ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட மலிவான விலையில் எரிபொருள்! | Fuel Contracts With Three Foreign Companies

மாதாந்த இறக்குமதி

இந்த நிறுவனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதித்தால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான தேவை குறையலாம். எனவே அரசாங்கத்தின் எரிபொருள் செலவும் குறைக்கப்படலாம் என்று அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் சராசரியாக மாதமொன்றுக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருளுக்காகச் செலவழித்து வருகிறது. இந்தநிலையில், குறித்த மூன்று நிறுவனங்களும் சராசரியாக 120 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை மாதாந்தம் இறக்குமதி செய்யும் என அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இந்த நடவடிக்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அரச அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட மலிவான விலையில் எரிபொருள்! | Fuel Contracts With Three Foreign Companies

எரிபொருள் அமைச்சு

இதேவேளை, இலங்கைக்கு வரும் மூன்று நிறுவனங்களும் இறக்குமதிக்கான அமெரிக்க டொலர்களை திரட்ட உள்ளூர் வங்கிகளைப் பயன்படுத்துவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், இலாபத்தை ஒரு வருடத்திற்குப் பின்னரே நாட்டிற்கு வெளியே எடுத்துச்செல்லமுடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று நிறுவனங்களும் கூட்டாக வருடத்திற்கு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் என்றும் இது திறைசேரியின் சுமையை குறைக்கும் என்றும் எரிபொருள் அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் 1,200 நிரப்பு நிலையங்கள் உள்ளன, புதிய நிறுவனங்களின் செயல்பாட்டிற்குப் பின்னர், பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திடம் சுமார் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களே எஞ்சியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US