சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை
சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வினை நடத்தியுள்ளது.
சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இரசாயனத்தை எவ்வாறு நீக்குவது?
மரக்கறி மற்றும் பழ வகைகளை குளிர்ந்த நீரில் கழுவுவதனை விடவும், குளிர்ந்த நீருடன் வினாகிரி அல்லது உப்பு சேர்த்து கழுவுவதன் மூலம் கிருமிநாசினிகளை நீக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி பியூமி அபேசுந்தர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
மேலும் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளில் காணப்படும் தோலினை நீக்குவதன் மூலம் இலகுவில் அவற்றின் மேற்பரப்பில் காணப்படும் கிருமிநாசினிகள் அல்லது விச இரசாயனங்களை அகற்றிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.