யாழின் முன்னாள் இந்திய துணைத்தூதுவர் வெளியிட்டுள்ள நூல்(Photos)
2015 முதல் 2018 வரை யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதுவராக இருந்த ஏ.நடராஜன், "கிராமத்திலிருந்து உலக அரங்கிற்கு (ஒரு நினைவுக் குறிப்பு)" என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் கடந்த சனிக்கிழமையன்று தமிழ்நாடு (இந்தியா) கோயம்புத்தூரில் வெளியிடப்பட்டது.
யேமன், ஸ்பெயின், சீனா, இந்தோனேஷியா, பிரான்ஸ், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய பல்வேறு நாடுகளில் இந்திய தூதரக பணிகளில் பணியாற்றிய அவர் தனது தனிப்பட்ட அனுபவத்தை பற்றி அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சேவைகள்
இலங்கையில்,நடராஜன், கண்டியில் இந்திய உதவி உயர்ஸ்தானிகராக மூன்று ஆண்டுகளும் (2011-2014) மற்றும் யாழ்ப்பாணத்தில் (2015-2018) மூன்று ஆண்டுகளும் இந்திய துணைத்தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் பணியாற்றும் போது,நடராஜன் அனைத்து தரப்பு மக்களுடனும் நெருக்கமான, அன்பான மற்றும் நல்லுறவுகளை வளர்த்துக் கொண்டார்.
போரினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்த போது, முக்கிய அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், வர்த்தக சமூகம், நிர்வாகிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர் சமூகம் மற்றும் மீனவர் சமூகத்துடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டார்.
மலையக தமிழர்களுடனும் யாழ்ப்பாண தமிழர்களுடனும் அவரது தொடர்பு அலுவலகத்தின் பொறிமுறைகள் மற்றும் அலுவலக நெறிமுறைகளின் தளைகளுக்கு அப்பால் சென்றது.
பாராட்டு
இந்தியா-இலங்கை ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படை (IPKF), தமிழீழ விடுதலைப் புலிகள், மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு போன்ற பல்வேறு விடயப்பரப்புகள் குறித்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், மொழி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளையும் அவர் தொட்டுள்ளார்.
புத்தக வெளியீட்டு நாளில், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன் உரையாற்றிய, ஜார்க்கண்ட் ஆளுநரின் கல்வி ஆலோசகரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி, “நடராஜனின் புத்தகம் படிப்பதற்கு தகுந்தது” என்று பாராட்டினார்.









