பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் கொக்குளாய் பகுதியிலும் போராட்டம்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், வடக்கு கிழக்கு பிரதேசத்தின் கந்தசாமி மலை தென்னமரவாடி, குருந்தூர்மலை, நீராவியடி, கொக்கிளாய், வெடுக்குநாறி, கன்னியா வெந்நீரூற்று, மயிலத்தமடு போன்ற தமிழர் பிரதேசங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்குட்பட்டு, தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களும், பாரம்பரிய அடையாளங்களும் சின்னங்களும் திட்டமிட்டு அடாத்தாக அபகரிக்கப்படுகின்ற விடயங்களையும், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து மகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிங்கள ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துவதையும் கண்டித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளைச் சர்வதேசம் பாராமுகமாகவே இருப்பது எமக்கு கவலையளிக்கின்றது. தையிட்டி விகாரையமைப்பு போன்ற செயற்பாடுகளினூடாக தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மயமாக்கல் திணிக்கப்படுகின்றது.
சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசானது, இலங்கையைப் பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடாக பிரகடனப்படுத்தும் நோக்கில், சிங்கள பௌத்தம் அல்லாத மற்ற அனைத்து இனங்களையும் மதங்களையும் அழிக்கும் நோக்கில் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இன்றைய கால சூழலில், தமிழர்களின் சுதந்திரத்தை நசுக்கி எம்மை அடிமைகளாக வைத்திருக்கக்கூடிய இலங்கையின் சுதந்திரதினத்தைத் தமிழ் மக்களாகிய நாம் புறக்கணிக்கின்றோம்.
எனவே இலங்கையின் சுதந்திரதினம் என்பது தமிழர் வரலாற்றில் கரிநாளாகவே உள்ளது.
இந்த உண்மைகளைச் சர்வதேசம் புரிந்துகொண்டு, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக கோரியுள்ளனர்.















தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
