பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - போராட்டத்தில் கலந்து கொள்ள முல்லைத்தீவில் பலருக்கு தடை
தமிழர்களின் பிரச்சினைகளை உலகறிய எடுத்துக்கூறும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து எதிர்வரும் ஆறாம் திகதி வரையில் இந்த தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, புதுக்குடியிருப் பிரதேசத்தினைச் சேர்ந்த 9 பேருக்கும், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 பேருக்கும், முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 பேருக்கும் எதிராக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதேவேளை ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி பிரதேசங்களிலும் பொலிசாரால் பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு தடை உத்தரவு பெறுவதற்காக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
