பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் இணைவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடகிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து வாகன பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கி வருகைதந்தபோது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.
முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் மற்றும் பெருமளவான முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.
இதன்போது ஜனாசா எரிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர்களின் நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்து உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான கோசங்களும், எழுப்பப்பட்டன.















தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
