அடுத்தாண்டு முதல் தினமும் 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
அடுத்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறையில் முக்கிய வளர்ச்சியை எதிர்பார்த்துள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு முதல் தினமும் 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை்கு வருவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
"கோவிட் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த நாட்டின் சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகிறது. கடந்த காலத்தில் 45 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தனர்.
கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
சுற்றுலாத்துறையில் ஈடுப்பட்டவர்களுக்கு சலுகை கடன், மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்துவதில் சலுகை, லீசிங் செலுத்துவதற்கான சலுகை என்பன மாத்திரமல்லது, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்துக்கொண்டுள்ள சாரதிகள், வழிக்காட்டிகளுக்கு 15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் வீதம் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri