முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை நோக்கி! பருத்தித்துறையை அடைந்த போராட்டக் குழுவினர்
புதிய இணைப்பு
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை துறைமுகத்தை காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.
முதலாம் இணைப்பு
இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி போராட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் ஆரம்பமாகியுள்ளது.
காலை 7.00 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
50ற்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.
இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையில் மேற்கொள்ளப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran), எஸ்.சிறீதரன்(S.Shritharan), இரா.சாணக்கியன்(R.Shanakkiyan) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா(Shanti Sreeshgantharaasa) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் பிரமுகர்கள் மீனவர்கள் என பலர் கலந்துகொண்டு பருத்தித்துறை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்கள்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
