சிறையில் ஏற்பட்ட சிநேகம்-வீட்டுக்கு வந்து 11 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நண்பர்
சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருக்கும் போது அறிமுகமான ஒருவர் சிலாபம் நாத்தாண்டி வெலிபென்னமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்று சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருந்து விட்டு, அந்த வீட்டில் இருந்த 11 லட்சத்து 66 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள், தங்க மோதிரம், அலைபேசி என்பன கொள்ளை

5 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள், 70 ஆயிரம் ரூபா பெறுமதியான அலைபேசி, 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுதியான தங்க மோதிரம் ஆகியவற்றை அந்த நபர் கொள்ளையிட்டுள்ளார்.
இந்த பொருட்களின் உரிமையாளர் விளக்கமறியலில் இருக்கும் போது பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி, நட்பாக பழகியுள்ளார். இவர்கள் இருவரும் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

சிறையில் ஏற்படுத்திக்கொண்ட நட்புக்கு அமைய சந்தேக நபர், வெலிபென்னமுல்ல பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்து விட்டு, பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து வெலிபென்னமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri