“தீரன்” திரைப்பட பாணியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்
தமிழகம் அரக்கோணம் அருகே ’தீரன்’ படப் பாணியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 12மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றில் ஆயுதங்களுடன் பிரவேசித்த குழுவினர், வீட்டில் இருந்து நான்கு பேரை வாளால் வெட்டியதுடன், துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்
“தீரன்” பட பாணியில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை கைதுசெய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன..
இதேவேளை இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழக பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam