சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளை தாக்கிய பிரான்ஸ் மற்றும் ரோயல் விமானப்படைகள்
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆயுத களஞ்சியத்தை இலக்காகக் கொண்டு, பிரான்ஸ் விமானப்படையுடன் இணைந்து ரோயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) டைஃபூன் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எழுச்சி
பாமிரா நகரத்திற்கு வடக்கே உள்ள மலைப்பகுதியில் அமைந்திருந்த நிலத்தடிப் ஆயுத களஞ்சியத்தின் நுழைவு சுரங்கங்கள் மீது இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பின என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீண்டும் எழுச்சியைத் தடுக்க, சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.