பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இந்தியா பயணம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பெப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அரசமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று(10.2.2026) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பிரான்ஸ் ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
உலகளாவிய விவகாரங்கள்
அடுத்த வாரம் புதுடில்லியில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி பங்கேற்பார்.

இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்குச் செல்லும் மெக்ரொன், அங்கு "இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டை" தொடங்கி வைப்பார்.
மோடியும் மெக்ரோனும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள்.
AI இம்பாக்ட் மாநாடு
கடந்த ஆண்டு பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தபோது, மேம்பட்ட மற்றும் சிறிய அளவிலான அணு உலைகளை (Small Modular Reactors) நிறுவுவதற்கான கூட்டாண்மையை உருவாக்குவதற்கான அறிவிப்பில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்த மாதம் இந்தியாவில் நடைபெறும் AI இம்பாக்ட் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri