அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களை விலக்கும் தீர்மானத்தில் சுதந்திரக் கட்சி உறுதி
தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்வதில் சுதந்திரக் கட்சி தீவிரமாக உள்ளது.
மத்திய செயற்குழு
சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவர்களின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவது தொடர்பில் அண்மையில் கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது.

கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தல்
இந்நிலையில் சனிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் கூடிய சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு, அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போரின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தும் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டோரை எதிர்வரும் தேர்தல் ஒன்றின் போது பொதுமக்களுடன் இணைந்து தண்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 22 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri