சுதந்திக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை
ஆளும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனது மத்திய குழுவின் கூட்டத்தை இன்று (ஜூலை 08) மாலை நடத்த திட்டமிட்டுள்ளது.
கூட்டத்துக்கு கட்சியின் தலைவர், மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார்.
இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை ஆகியவை தொடர்பில் விரிவாக விவாதிக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்- ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இன்று நிதி அமைச்சராக பதிவியேற்றுக்கொண்ட பசில் ராஜபக்ஷ தொடர்பில் வெளியிட்ட விமர்சனம் அரசாங்கத்துக்குள் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையிலேயே இன்றைய கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுகிறது.