அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு: வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான கார் பந்தயம்
அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக கார் பந்தயம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஏற்பாடு செய்துள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய நினைவிடங்கள் மற்றும் வீதிகளை உள்ளடக்கி நடத்தப்படும் இந்த 'Freedom 250 Grand Prix' கார் பந்தயத்தை சுமார் இரண்டு இலட்சம் பார்வையாளர்கள் வரை நேரில் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வொஷிங்டனின் புகழ்பெற்ற 'பென்சில்வேனியா' வீதியில் கார்கள் மணிக்கு 185 மைல் வேகத்தில் செல்லும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
போட்டி ஆரம்பம்
இப்போட்டியை முன்னிட்டு இராணுவ விமானங்களின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதால், அங்குள்ள 'ரொனால்ட் ரீகன்' சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்து மூன்று மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்டு போட்டியை முறைப்படி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் டிரம்பின் ஆதரவு நிலை குறைந்துள்ள நிலையிலும், ஈரான் போர் சூழலுக்கு மத்தியிலும், தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்தும் நோக்கில் அவர் தொடர்ச்சியாக இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.