இந்தியாவுக்கு இலவச சுற்றுலா E-Visa! 11 தென்கிழக்காசிய நாடுகளுக்கு புதிய சலுகை
தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 11 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச மின்னணு சுற்றுலா விசா (Free E-Tourist Visa) வழங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
நவம்பர் 17ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23ஆவது இந்தியா ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கான தகுதி நிபந்தனைகள்
இந்தச் சலுகை முன்மொழியப்பட்டுள்ள 11 நாடுகள் : புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து. திமோர்-லெஸ்தே, வியட்நாம் ஆகியனவாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதே நோக்கமாகும்.
மேலும், கடல்சார் ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்புப் பயிற்சி, முக்கிய கனிம வளங்கள் மற்றும் அணுசக்தித் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா முன்மொழிந்துள்ளது.
இதேவேளை இலவச E-Tourist Visa திட்டம் நடைமுறைக்கு வரும் திகதி மற்றும் அதற்கான தகுதி நிபந்தனைகள் குறித்து இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
தந்தை தயாரித்த வினாத்தாளில் மகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.. அரச பரீட்சையில் இடம்பெற்றுள்ள முறைகேடு