இலங்கை மத்திய வங்கி வழங்கிய ஒப்புதல்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை (prepaid card) முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண (Gemunu Wijeratne) இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி இது தொடர்பான ஒப்புதலை ஏற்கனவே போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியிருகிறது.
இதன் அடிப்படையில் இந்த மாத இறுதியில் பரீட்சாத்த திட்டமாக மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டையின் மூலம் கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என கெமுனு விஜயரட்ண குறிப்பிட்டார்.
இந்த திட்டத்திற்கு தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் முழுமையான ஆதரவை புரிந்துள்ளனர்.
எனினும் சில தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 21 மணி நேரம் முன்
விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா? Cineulagam
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri