யாழில் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம்
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி (2025.03.28) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் மக்களுக்கான நீதி அமைப்பினால் சட்ட ஆலோசனை முகாம் இன்று(25) இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் இருந்து சுண்டிக்குளம்வரை காணப்படும் கரையோர காணிகளை அரச காணியாக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின் தமிழர் பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
சுமந்திரனுடன் கலந்துரையாடி
கரையோர காணி உரிமையாளர்களை சந்தித்து அவர்களுக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலைமையில் 20 மேற்பட்ட சட்டத்தரணிகள் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஒன்று கூடினர்.
ஆழியவளை தொடக்கம் கட்டைக்காடு வரையான மக்கள் அதிகளவானோர் குறித்த சட்ட ஆலோசனை முகாமில் பங்குகொண்டு சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதுடன் அவர்களிடம் இருந்து சட்டரீதியான தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
காணி உரிமம் வைத்திருப்பவர்கள், இல்லாதவர்கள் நேரடியாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் கலந்துரையாடி மேலதிகமான தகவல்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
