கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு இலவச உர விநியோகம்
கிண்ணியா விவசாயிகளுக்கு புதிய அரசாங்கத்தால் வழங்க திட்டமிடப்பட்ட, இலவச உர விநியோகம் இன்று (18) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மஜித் நகர் கிராம சேவகர் பிரிவில், குரங்குபாஞ்சான், வெள்ளம்குளம் மற்றும் தீனேரி ஆகிய விவசாய சம்மேளன பிரிவு விவசாயிகளுக்கு MOP பசளை வழங்கி வைக்கப்பட்டது.
சிறுபோக, பெரும்போக விவசாயிகள்
ஒரு ஏக்கருக்கு பெரும்போக விவசாயிகளுக்கு 10 கிலோ கிராம் வீதமும், சிறு போக விவசாயிகளுக்கு 12 கிலோ கிராம் வீதமும் வழங்கி வைக்கப்பட்டது என கிண்ணியா கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிண்ணியா கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 15 விவசாய சம்மேளன பிரிவுகள் இருப்பதாகவும், அனைத்து பிரிவு விவசாயிகளுக்கும் கட்டம் கட்டமாக இலவச MOP உரம் வழங்கி வைக்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |