உயிரை மாய்த்துக் கொண்ட யாழ். இளைஞன்! உறவினர்கள் சந்தேகம்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செட்டி வீதி, இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த அமுதலிங்கம் நிவேதன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் நேற்று இரவு இருந்துள்ளார். இதன்போது இரவு உணவுக்காக அவரது தாயார் அவரை அழைத்தபோது, வருவதாக கூறியதாகவும், இருப்பினும் வீட்டுக்குள் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உறவினர்கள் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டபோது, அந்த இளைஞனின் தொலைபேசி செயலிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த இளைஞன் இன்றையதினம் வீட்டின் முன்னால் உள்ள காணியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.