வவுனியாவில் இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை: 350 பேர் பங்கேற்பு
வவுனியாவில் இடம்பெற்ற இலவச கண் பரிசோதனையில் 350 பேர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் நிதி உதவியில் யாழ். போதானா வைத்ததியசாலையின் கண் பிரிவுடன் இணைந்து வவுனியா விபுலானந்தா கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு க.பொ.த சாதரண தரம் கற்ற பழைய மாணவர்களின் ஏறபாட்டில் இக் கண் பரிசோதனை கல்லூரியில் இடம்பெற்றது.
பிரித்தானியாவில் வசிக்கும் வைத்தியர் வேலாயுதம் சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 350 பேர் வரையில் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில் 53 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை யாழ் போதான வைத்தியசாலைக்கு பேருந்தில் அழைத்துச் சென்று இலவசமாக கண்புரை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாசித்தலுக்கான கண்ணாடிகள் 82 பேருக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதுடன், மேலும் 175 கண்ணாடிகள் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
