மெத் இரசாயன விவகாரம்! சுங்கம் மற்றும் சி.ஐ.டி சிறப்பு விசாரணை
படிக மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து இரசாயனங்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மித்தெனிய, நெடோல்பிட்டி மற்றும் கடான ஆகிய இடங்களில் குறித்த இரசாயணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர்
இந்நிலையில் பொலிஸ்மா அதிபரின் (ஐ.ஜி.பி) உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுத் துறையும் (சி.ஐ.டி) இந்த சம்பவம் குறித்து தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், ஜனவரி 29 ஆம் திகதி மித்தெனியாவிற்கு இரசாயனங்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்படி சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான பாணந்துறை நிலங்கவின் இரண்டு சகாக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த இரசாயனக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
