இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து விசாரணை
இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் உற்பத்திக்காக இந்த இரண்டு கொள்கலன்களிலும் இரசாயனங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கொள்கலன்களும் எவ்வாறு சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்டது என்பது குறித்து திணைக்களம் விசாரணகைளை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த கொள்கலன்கள் தொடர்பில் ஊடகங்களிடம் அறிவிக்கப்படும் என சுங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்வற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரசாயன வகைகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் ஆய்வு நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
