வவுனியாவில் இராஜாங்க அமைச்சரால் இலவச குடிநீர் வழங்கிவைப்பு
வவுனியா, கற்பகபுரம் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தானால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெறுவதில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்தனர்.
இது தொடர்பில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு மக்களால் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இலவச குடிநீர் இணைப்பு
இதனையடுத்து, 376 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவச குடிநீர் இணைப்பு இராஜாங்க அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வடமாகாண தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் சிரேஷ்ட சமூகவியலாளர் கோபிநாத் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |