கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Ukraine Court of Appeal of Sri Lanka
By Dhayani Mar 18, 2024 01:11 AM GMT
Report

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் நேற்று சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு அதிகாரிகளின் மோசடி அம்பலம்

குடிவரவு அதிகாரிகளின் மோசடி அம்பலம்

கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Fraudulent Act By Couple In Colombo Court Order

பெருந்தொகை பணமோசடி

கடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தம்பதியினரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இதுவரை 55 இலங்கையர்களை நாட்டை விட்டு அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Fraudulent Act By Couple In Colombo Court Order

இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மூவர் உயிரிழப்பு

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Fraudulent Act By Couple In Colombo Court Order

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மோடியின் அழைப்பை நிராகரித்த ஈழத்தமிழ் தலைவர்கள்

மோடியின் அழைப்பை நிராகரித்த ஈழத்தமிழ் தலைவர்கள்

தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US