தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இது தொடர்பில் தெரிவிக்கையில்,
பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சட்டவிரோத வியாபாரிகள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இரசாயனங்களை சேர்க்கின்றனர்.

பொருத்தமற்ற தானிய வகைகளை அகற்ற நடவடிக்கை
சந்தையில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான தானியங்கள் சுகாதார பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் உள்ள நச்சு இரசாயனங்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நச்சு இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் தானியங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டத்தின் கீழ் நிறுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சந்தையில் பொருத்தமற்ற தானிய வகைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam