சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு மோசடியாளர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வேறு வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடைச் சிறைச்சாலையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் தடுத்து வைப்பு
இன்னும் சில சந்தேக நபர்கள் மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கடைசியாக கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க, மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மஹரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும்,சந்தேக நபர்களில் ஒருவர் தற்போதைக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
