பரிகாரம் என்ற போர்வையில் பல இலட்சம் மோசடி!
அம்பாறை –சியம்பலாவெவ பிரசேத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள தோஷத்தை நிவர்த்தி செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோஷத்தை நிவர்த்தி செய்தல்
தோஷத்தை நிவர்த்திப்பதற்கான பரிகாரமாக தங்கத்தால் செய்யப்பட்ட பறவையின் உருவத்தை வீடொன்றில் வைத்த சந்தேகநபர்கள் 3 இலட்சம் ரூபாவை வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்றுள்ளனர்.
சந்தேகநபர்களால் வைக்கப்பட்ட பறவையின் உருவத்தை வீட்டு உரிமையாளர் தங்க விற்பனை நிலையமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
பரிகாரத்திற்காக 6 இலட்சம் ரூபாய் அறவீடு
இதன்போது, குறித்த பறவையின் உருவம் தங்கத்தினால் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரத்திற்காக 6 இலட்சம் ரூபாவை அவர்கள் வீட்டு உரிமையாளரிடம் கோரியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
