அஸாத் மௌலானாவை விசாரிக்க வெளிநாட்டுக்கு பறந்த ஷானி அபேசேகர
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரான்ஸ்க்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்தப் பயணத்தின் முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி
இதன்படி, தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாவிடம் நேரடி விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த குழுவின் முதன்மை நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இரகசியப் பயணம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அஸாத் மௌலானாவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் திடுக்கிடும் வெளிப்படுத்தல்கள் குறித்து மேலதிக விளக்கங்களையும், விரிவான வாக்குமூலங்களையும் அதிகாரிகள் கோரி வருகின்றனர்.

சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்தப் புலனாய்வு முயற்சியானது, தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றது.
இருப்பினும், இந்த இரகசியப் பயணம் மற்றும் விசாரணைகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan