உருட்டு பிரட்டு திருட்டு எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நாளை மே தின கொண்டாட்டம்..!
“உருட்டு பிரட்டு திருட்டு” எனும் தொனிப்பொருளிலில் கொழும்பில் நாளைய தினம்(01.05.2026) மே தினக் கொண்டாட்டம் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சஜித் தலைமையில் மே தினக் கொண்டாட்டம்
மேற்படி அறிக்கையில்,
இடம்: பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானம், மாளிகாவத்தை, கொழும்பு.
நேரம்: நாளை (மே 01) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பம்.
விசேட அம்சம்: இந்த முறை மே தின நிகழ்வுகளில் பேரணிகள் எவையும் இடம்பெறாது, பொதுக் கூட்டம் மாத்திரம் நடைபெறும்.
தொனிப்பொருள்: “உருட்டு பிரட்டு திருட்டு” எனும் விசேட தொனிப்பொருளில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ள பல தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
அத்துடன், பொதுமக்களின் நலன் கருதி இந்நிகழ்வு, சஜித் பிரேமதாஸ வின் உத்தியோகபூர்வ முகநூல், வலையொளி மற்றும் ஏனைய சமூக ஊடகத் தளங்கள் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி இந்த மாபெரும் மே தினக் கூட்டம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்