பிரான்ஸில் பொலிஸ் அதிகாாி மீது கத்திக்குத்து தாக்குதல்: சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரி
பிரான்ஸ் நாட்டின் கெனிஸ் நகரில் பொலிஸ் நிலைய அதிகாாி ஒருவாின் மீது தாக்குதல் நடத்திய ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இந்த பொலிஸ்நிலையத்தை சேர்ந்த சில பொலிஸார் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக வாகனத்தில் ஏறி புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஒருவா், வாகனக் கதவை திறந்து, வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த அதிகாரி மீது தாக்குதல் நடத்தினார்.
கத்திக்குத்து தாக்குதலில் அந்த பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது.
இதன்போது துரிதமாக செயல்பட்ட வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.
இதன்போது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தநிலையில் தாக்குதல் நடத்தியவர் யார்? தாக்குதல் நடத்த காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri